இனி பர்சனல் லோன் வாங்குவதில் சிக்கல்!! RBI இன் அதிரடி!!

Photo of author

By Gayathri

பொதுவாக பர்சனல் லோன் என்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவது ஆகும். அதாவது ஒருவருடைய சூழலைப் பொறுத்து கல்வி கடன், வீட்டுக் கடன் மற்றும் மருத்துவ கடன் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பர்சனல் லோன் ஆனது பெறப்படுகிறது. ஆனால் தற்பொழுது RBI இதில் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இந்த பர்சனல் லோன் விதிகளானது பயனர்களுக்கு குறைந்த வட்டி விகிதம் மற்றும் குறைந்த இஎம்ஐ என பல்வேறு ஆசைகளை காட்டி அதிக அளவில் பர்சனல் லோன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் பர்சனல் லோன் மூலம் கடன் பெற்றுள்ள ஒருவர் அது முழுவதுமாக கட்டி முடிப்பதற்குள் மற்றொரு வங்கிகளோ அல்லது நிதி நிறுவனத்திலோ மீண்டும் பர்சனல் லோன் பெற்று விடுகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாகவும் சிபில் ஸ்கோரை மேம்படுத்தும் விதமாகவும் தற்பொழுது RBI முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. RBI இன் இந்த கட்டுப்பாடுகளின் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பயனர்களுடைய சிபில் ஸ்கோர் விவரங்களானது அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம், பயணர் ஒருவர் ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் பர்சனல் லோன் பெற்றிருக்கிறார் எனில் அதனை முழுவதுமாக கட்டி முடிக்கும் வரை மற்றொரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் பர்சனல் லோன் பெற முடியாது. அது மட்டுமல்லாது வேறு எந்த விதத்திலும் அவர்களால் சிபில் ஸ்கோரை உயர்த்தவோ அல்லது இதனை வைத்து வேறொரு இடத்தில் கடன் பெறவும் முடியாது என்று RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version