Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை மூலிகை வைத்தியம் மூலம் குணப்படுத்தினர்.ஆனால் தற்பொழுது எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.

இன்றைய மருத்துவத்தை காட்டிலும் நம் பாரம்பரிய மருத்துவம் அதிக பலன் கொண்டவையாக இருக்கின்றது.தற்பொழுது மக்கள் மீண்டும் பழைய பாரம்பரிய மருத்துவதையே பயன்படுத்த விரும்புகின்றனர்.

எலும்பு முறிவு,மூட்டுவலி,முதுகு வலி போன்றவற்றை சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடைந்து போன எலும்புகளை நம் பாரம்பரிய முறைப்படி குணப்படுத்திக் கொள்வது குறித்து இங்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் சதாப்பு இலையை பயன்படுத்தி உரிய நிவாரணம் பெறலாம்.இந்த சதாப்பு இலை செடிக்கு அருகாம்பச்சை என்றும் அழைக்கப்படுகிறது.இந்த செடி அடர்ந்த காடுகளில் அதிகளவு வளர்கிறது.

கிட்டத்தட்ட முருங்கை இலையின் தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த சதாப்பு இலை செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.வறண்ட பகுதியிலும் இந்த செடி செழிப்பாக வளரும்.இந்த சதாப்பு இலையை கல்வம் அல்லது அம்மியில் வைத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் பூசி காடுபோட்டுக் கொள்ள வேண்டும்.

தினமும் இந்த சதாப்பு இலை பேஸ்டை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்து வந்தால் கூடிய விரைவில் உடைந்த எலும்புகள் ஓட்டிவிடும்.இந்த சதாப்பு இலை பசையை மூட்டு பகுதியில் அப்ளை செய்தால் வலி வீக்கம் குறையும்.

உடல் வலி,மாதவிடாய் வலி,வயிற்று வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் இந்த சதாப்பு இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வரலாம்.சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனை இருப்பவர்கள் இந்த இலையை அரைத்து சாறு எடுத்து பூண்டுடன் கொதிக்க வைத்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சதாப்பு இலையை அரைத்து மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.சதாப்பு இலையை அரைத்து சாறு எடுத்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு சுருட்டல் பாதிப்பு குணமாகும்.

குடலில் உள்ள புழுக்கள் மலம் வழியாக வெளியேற இந்த இலையை அரைத்து தினசரி மூன்றுவேளை சாப்பிட வேண்டும்.கண் வலி குணமாக இந்த இலையை அரைத்து கண்களை சுற்றி பற்றுப்போடலாம்.

Exit mobile version