இனி அரசுபேருந்துகளில் லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை!! போக்குவரத்துதுறையின் மாஸ் செயல்!!

0
494
No more tickets for luggage in government buses!! Mass Action by Transport Department!!

Tamil Nadu:  தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து என சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் தன்னுடன் எடுத்து வரும் பொருட்களுக்கு கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக துறை அறிவித்திருந்தது. தற்போது அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி லக்கேஜ்க்கு டிக்கெட் இல்லை என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதில் துணிகள் கொண்டு செல்லும் பைகள், கேமரா, லேப்டாப் என கையில் அடங்கும் பொருட்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நாற்காலி, கலை நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லும் கருவிகள், தங்களின் பொருட்களை எடுத்துச் செல்லும் டிராலி வகையான (65 CM Medium Size) கொண்ட சூட்கேஸ்கள், பைகள் என இவற்றையெல்லாம் எடுத்த செல்ல கட்டணம் இல்லை என அறிவித்துள்ளது. மேலும் தனது சொந்த பயன்பாட்டிற்காக 20 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம்.

இவை அனைத்திற்கும் கட்டணம் வாங்க கூடாது என தமிழக அரசு போக்குவரத்து கழகம்  அறிவித்துள்ளது. மேலும் எளிதில் தீ பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பயணிகள் இல்லாத சுமைகள் என பேருந்துகளில் எடுத்த செல்ல கூடாது. முக்கியமாக செய்தி தாள்கள் மற்றும் தபால்கள் எடுத்த செல்ல முன் அனுமதி பெற வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் பயணிகள் மற்றும் நடத்துனரின் இடையே ஏற்படக்கூடிய வாக்குவாதங்களை தவிர்ப்பதற்கு என கூறப்படுகிறது.