இனி கரண்ட் பில் பற்றிய கவலை வேண்டாம்! ரூ.78,000 மானியம் + 300 யூனிட் இலவச மின்சாரம் பெற இதை உடனே செய்யுங்கள்!
நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இதற்கு இடையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.தமிழகத்தில் வீட்டு சாரீஸ்க்கு 100 யூனிட் இலவசம்.அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் யூனிட்டிற்கு ஏற்றார் போல் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
தற்பொழுது கோடை காலம் முடிந்திருக்கும் நிலையில் பெரும்பாலானோர் வீடுகளில் கரண்ட் பில் அதிகரித்திருக்கும்.இதனால் பலர் அதிர்ச்சியில் இருப்பீர்கள்.இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சார கிடைக்கும் மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டம் பற்றி தெரிந்தால் வாழ்நாளில் கரண்ட் பில் கட்டும் நிலை ஏற்படாது.
பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டம்
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.அதன்படி வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த ரூ.78,000 மானியமாக மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.இந்த சோலார் பேனல் மூலம் வீட்டு தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்து லாபம் பார்க்க முடியும்.1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.30,000 ரூபாய்,2 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.60,000,3 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டத்திற்கு தகுதி
1)இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
2)மேற்கூரை கொண்ட சொந்த வீடு இருக்க வேண்டும்.
பிஎம் சூர்யா கர் முஃப்டீ பிஜிலி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
ஸ்டெப் 01:
pmsuryaghar.gov.in என்ற போர்ட்டலில் மின்சார விநியோக நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 02:
உங்கள் நுகர்வோர் எண்,பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் log in செய்து மேற்கூரை சோலாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்டெப் 04:
சோலார் பேனல் நிறுவன விவரத்தை பதிவிட்டு நெட் மீட்டருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.பின்னர் நெட் மீட்டர் மற்றும் டிஸ்காம் மூலம் ஆய்வு மேற்கொண்ட பின்னர் போரட்டல் வாயிலாக கமிஷன் சான்றிதழ் வழங்கப்படும்.
ஸ்டெப் 05:
வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை குறித்த விவரங்களை போராட்டலில் சமர்ப்பிக்கவும்.இவ்வாறு செய்த 30 நாட்களுக்குள் பதிவு செய்த வங்கி கணக்கிற்கு மானியம் அனுப்பப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.