இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

0
152
No more worry about electricity.. Senthilbalaji published good news!! Amal all over Tamil Nadu!!

இனி மின்சாரம் பற்றி கவலை இல்லை.. செந்தில்பாலாஜி வெளியிட்ட இன்பச்செய்தி!! தமிழ்நாடு முழுவது அமல்!!

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்ததையொட்டி தற்பொழுது இது உச்சம் தரும் அளவிற்கு மின்சாரத்தை ஈட்டி தந்துள்ளது. இது குறித்து செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியின் மின்சார திட்டத்தில் தற்பொழுது என்றும் இல்லாத அளவிற்கு 4141 மெகாவாட் என்ற அளவில் மின்சாரத்தை சேகரித்துள்ளது.மற்ற மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான் போன்ற பாலைவனங்களில் கிட்டத்தட்ட 14 454 மெகாவாட் வரை உற்பத்தி செய்யும் வகையில் சோலார் அமைப்புகள் உள்ளது.

ஆனால் நமது தமிழ்நாட்டில் 5690 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிற்கு மட்டுமே சோலார் பேனல்கள் தற்பொழுது நிறுவப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதில் தமிழக அரசு கவனம் செலுத்தும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளடைவில் சோனார் பேனல்கள் கொண்டுவரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நமது தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்தால் 100% சூரிய ஒளியின் மின்சாரத்தை ஈட்ட முடியாது அதன் காரணமாக ஏற்றம் இறக்கமாகவே மின் உற்பத்தி காணப்படும்.இந்த நிலையில் தற்போது தான் என்று இல்லாத அளவிற்கு 4141 மெகாவாட் ஆளவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி ஆகியுள்ளது.

மேலும் சட்டசபையில் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ இப்பொழுது தமிழகத்தில் அதிக அளவு மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளதால் எப்பொழுது பழுப்பு நிலக்கரி திட்டத்தை கொண்டு வரப் போகிறீர்கள். ஜெயங்கொண்டத்தில் அதற்கான பணிகள் எப்பொழுது தொடங்கும் அது சம்பந்தமான திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி திட்டம் கொண்டு வருவதற்கான எந்த ஒரு ஆலோசனையும் தற்பொழுது வரை செய்யப்படவில்லை என்று திட்டவட்டமாக அதற்கு பதில் அளித்தார்.இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கண்ணன் இந்த பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் மீண்டும் அவர்களிடமே நிலங்கள் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்பொழுது மின்சார தேவை அதிகரித்து உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்சார சோலார் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி கூறியதாவது, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டமானது கட்டாயம் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும். அதற்கான திட்டமும் கையில் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மாவட்டங்களாக விரைவில் மாற்றப்படும். அதனின் முதல் செயல்படாக திருப்பூர் மாவட்டத்தில் இதற்காக பூங்கா நிறுவப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சோலார் பேனல் திட்டம் விரைவிலேயே கொண்டு வந்து செயல்பாட்டுக்கு வரும் என கூறினார்.