தலையில் எண்ணெய் வைக்கும் போது தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்! முடி வேரோடு கொட்டும்!!
முடியை பராமரிப்பதில் மிகவும் முக்கியமான ஒன்று தலையில் எண்ணெய் வைப்பது. அவ்வாறு தலையில் எண்ணெய் வைப்பது பல முறைகள் உள்ளது. அதனை மாற்றி செய்கையில் முடி உதிர்வு ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் தலையில் எண்ணெய்யை சூடு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு சூடு செய்த எண்ணையை தலையில் தேய்ப்பதால் அதன் சத்துக்கள் அனைத்தும் வேரில் நன்றாக இறங்கும். அதேபோல என்னை வைத்து ஒரு மணி நேரத்திலேயே தலை குளித்து விட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கழித்து குளிக்க கூடாது. அவ்வாறு எண்ணெய் வைத்து ஒரு நாள் முழுவதும் வெளியில் சென்று விட்டு வந்தால், வெளியில் உள்ள சிறு சிறு தூசி குப்பை போன்றவை எண்ணெய் பிசுக்கியில் தலையில் ஒட்டிக் கொள்ளும். இதனால் பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனை உண்டாகும்.
பொடுகு தொல்லை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயை தடவ கூடாது. அதற்கு மாறாக கற்றாழை ஜெல் அல்லது வேப்ப எண்ணையை தடவலாம். அதேபோல என்னை வைக்க வேண்டும் என்றால் மாலை நேரத்திற்கு முன்பாக வைத்து குளித்து விட வேண்டும். ஏனென்றால் மாலை நேரத்திற்கு பிறகு முடியின் வேர்க்கால்கள் இயற்கையாகவே மூடும் தன்மை உடையவை. நீங்கள் அதற்குப் பிறகு என்னை தடவினாலும் உங்களுக்கு பயன் அளிப்பது சற்று குறைவுதான். அதுமட்டுமின்றி சைனஸ் சளி இருமல் ஆஸ்துமாகிய பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் எண்ணெய் வைப்பது தவிர்ப்பது மிகவும் நல்லது.