இன்றைய உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.
சர்க்கரை நோய் ஏற்பட்டால் இரத்த அழுத்தம்,சிறுநீரக பாதிப்பு,கண் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.சர்க்கரை நோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பதினைந்து லட்சம் பேர் இறப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
அதிக இனிப்பு சாப்பிடுதல்,இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல்,பரம்பரை தன்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மருத்துவ குணம் நிறைந்த இலைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
வேப்பிலை,சீத்தா,கற்றாழை உள்ளிட்ட மூலிகை இலைகள் இன்சுலின் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வேப்பிலை
ஒரு கொத்து வேப்பிலையை அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி வேப்பிலை சாறு சேர்த்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
சீத்தா இலை
சீத்தா இலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது.ஒரு சீத்தா இலையை அரைத்து நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கற்றாழை
பிரஸ் கற்றாழை துண்டில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு ஜெல் எடுத்து நீரில் கலந்து ஒரு இரவு ஊற விடவும்.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
கொய்யா இலை
இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்பட கொய்யா இலையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு கொய்யா இலையை நறுக்கி சேர்க்கவும்.இதை சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் இரத்த சர்க்கரை அள்வு கட்டுப்படும்.