Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமேல் இதற்கும் கட்டிட நிறைவு சான்று பெற தேவையில்லை! மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு! 

no-need-to-get-building-completion-certificate-for-this-anymore-electricity-board-action-announcement

no-need-to-get-building-completion-certificate-for-this-anymore-electricity-board-action-announcement

இனிமேல் வீடு மற்றும் கடைகள் ஒன்றாக இருப்பின் அதற்கு புதிய மின்சார இணைப்பு வாங்குவது தொடர்பாக தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கட்டிடங்கள் கட்டும்பொழுது அனைவரும் சிசி என்று அழைக்கப்படும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிசி சான்றிதழ் எதற்கு என்றால் கட்டிடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்குத்த தான். மேலும் இதில் சிசி சர்டிபிகேட் வாங்கி இருந்தால் தான் புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற வசதிகள் வழங்க முடியும். எனவே 3 வீடுகளுக்கு மேல் கட்டுவோர்கள் இந்த சிசி எனப்படும் கட்டிடம்  நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தால் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இதனால் கட்டிட பணிகள் முடிந்தும் மின்சார இணைப்பு வாங்க முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது.
இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில் மின்சார வாரியம் புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்றும் தமிழக அரசின் விதிமுறைகள்படி ஒரு சில கட்டிட வகைகளுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
என்னதான் அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் ஒரு சில இடங்களில் வீடும் கடையும் ஒரே இடத்தில் இருக்கின்றது இதற்கும் கட்டிட நிறைவு சான்றிதழ் கேட்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதாவது தரைதளத்தில் கடையும் மேல் தளத்தில் வீடும் இருக்குமாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்பது தான் தற்போதைய புகார். எனவே இந்த புகாரை அடுத்து தமிழக மின் வாரியம் இனிமேல் வீடு மற்றும் வணிக கடை இரண்டும் ஒரே இடத்தில் இருந்தாலும் அதற்கும் கட்டிட நிறைவு சான்றிதழ் கேட்கக் கூடாது என்று பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வணிக பிரிவில் 300 மீட்டருக்குள் இருக்கும் கட்டிடத்தில் வீடு மற்றும் கடை இரண்டும் இணைந்து இருந்தால் அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை. பொறியாளர்களும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Exit mobile version