உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! முதல்வருக்கு 25000 அபராதம்!!!

0
231
#image_title

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
முதல்வருக்கு 25000 அபராதம்!!!

அகமதாபாத் : பிரதமர் மோடி தொடர்பான கல்வி சான்றிதழ் வழங்கத்தேவை இல்லை என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தகவல் ஆணையர் உத்தரவு ரத்து செய்தது. மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 25,000 அபராதம் விதித்தது.

பிரதமர் மோடி குறித்த கல்வி சான்றிதழ் கேட்டு பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கழைக்கழகம், குஜராத் பல்கழைக்கழகம் ஆகியவற்றிடம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரியிருந்தார்.

பிரதமர் மோடி 1978 ல் இளங்கலை பட்டபடிப்பு படித்ததாகவும் 1983 ல் முதுகலைப் பட்டப்படிப்பு படித்ததாகவும் தகவல். இதற்கு தலைமை தகவல் ஆணையர் டெல்லி , குஜராத் பல்கழைக்கழகங்களுக்கு 2016 ஆம் ஆண்டு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து பல்கழைக்கழகங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு குஜராத் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் வழக்கு முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து குஜராத் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிரதமர் மோடி குறித்து பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கத் தேவையில்லை எனவும் தகவல் ஆணையம் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ 25000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இவ்வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஜனநாயகத்தில் பிரதமர் பதவி வகித்தவர் படித்தவரா? இல்லையா? என்பது முக்கியம் அல்ல. என்று வாதாடினார்.