Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் !!

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே பயங்கர சண்டை வலுத்து வருகிறது.

சமீபத்தில் சீமானுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், கைது பண்ணி சீமானை நாங்கள் காட்டுறோம். நான் இந்த மண்ணோட பெண். இது இரண்டு மணி நேரம் படம் இல்லை. ஒரு திமிர் பிடித்த ஒருத்தருடன் நான் வாழ்ந்திருக்கிறேன். தமிழன் என்ற திமிர் இல்லை. மாட்டுக்கறி தின்னுன திமிரு. அவரை எப்படி அடக்க வேண்டுமோ அப்படி அடக்குவேன் என்று ஆவேசமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து பேசுகையில், நான் மிகவும் அமைதியாக இந்த விஷயத்தில் கடந்து போக வேண்டும் என்று பார்க்கிறேன். எனக்காக மக்கள் இருக்கிறார்கள். மேலும், எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இதைப் பற்றி மீண்டும் பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. இது பற்றி பேச எனக்கு கேவலமாக இருக்கிறது என்றார்.

இதன் பின்பு பேசிய விஜயலட்சுமி எனக்கும், சீமானுக்கும் திருமணம் நடந்து விட்டது. அதற்கான புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசுகையில், நான் உயர்ந்த லட்சியங்களை கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளை கொண்டுவந்து அவதூறு வீசுகிறீர்கள். நான் அமைதியாக இருப்பதால், என்னுடைய மௌனத்தால் விஜயலட்சுமி சொல்வது எல்லாம் உண்மை ஆகாது. அந்த லேடி சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். நான் வெடித்து சிதறினேன் என்றால் ஒருத்தனும் இருக்க முடியாது. திருமண புகைப்படம் இருக்கிறது என்று சொல்கிறார்களே அதை முதலில் வெளியிடச் சொல்லுங்கள். எங்கு திருமணம் நடந்தது. எந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்ற விவரத்தையெல்லாம் வெளியிடச் சொல்லுங்கள் என்றார்.

 

 

 

Exit mobile version