சென்னை எழிலகத்தில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்தில் முழு கவச உடை அணிந்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், துணை இயக்குனர் ராஜு, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நோய்தொற்று மரபணு மாற்றத்தை தெரிந்துகொள்வதற்காக உயர்தரமான முழு மரபணு பரிசோதனை மையத்தை முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார் இந்த மையத்தில் இதுவரையில் 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அந்த சோதனைகளின் முடிவில் டெல்டா வகை நோய் தொற்று தான் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இதுவரையில் இந்த உயர்தரமான முழு மரபணு பரிசோதனைக்காக 6714 மாதிரிகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதில் 4,618 மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வந்திருக்கிறது.
இந்த மாதிரிகளில் 96% டெல்டா வகை வைரஸ் என்று தெரியவந்திருக்கிறது, தற்சமயம் புதிதாக ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கிளஸ்டர் பாதிப்பு இருக்கும் எட்டுவகையான பகுதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக இந்த முழு மரபணு பரிசோதனை செய்யப்படுகின்றது. அப்படி செய்யப்பட்டதில் இதுவரை டெல்டா வைரஸ் வைரஸ் ஆகவே இருந்து கொண்டிருக்கிறது. யாருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.