Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது!!! லியோ பட நடிகை மடோனா செபஸ்டியன் பேட்டி!!!

#image_title

என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது!!! லியோ பட நடிகை மடோனா செபஸ்டியன் பேட்டி!!!

லியோ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை மடோனா செப்ஸ்டியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் நடித்தது என் அம்மாவிற்கும் எனக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார்.

தமிழில் காதலும் கடந்து போகும், ஜுங்கா, கவண், வானம் கொட்டட்டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகை மடோனா செபாஸ்டின் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த 19ம் தேதி வெளியான லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் லியோ திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது என்னவென்றால் நடிகர் விஜய் அவர்களுக்கு தங்கையாக நடிகை மடோனா செபாஸ்டியன் அவர்கள் நடித்துள்ளார் என்பது தான். இந்நிலையில் லியோ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை மடோனா செபாஸ்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இத குறித்து நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் “நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் நானும் நடிக்கின்றேன் என்பது என் அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த விஷயத்தை என் நண்பர்களுக்கும் கூட யாருக்கும் நான் சொல்லவில்லை.

லியோ திரைப்படத்தில் நான் நடித்தது எப்படியும் இசை வெளியீட்டு விழாவில் தெரியவரும் என்று நான் எதிர் பார்த்தேன். ஆனால் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் ரத்தானதால் நான் லியோ திரைப்படத்தில் நடித்தது படம் வெளியாகும் வரை ரகசியமாகவே இருந்தது. இருந்தும் லியோ வெளியாவதற்கு முன்னர் சில தினங்களுக்கு முன்பு எப்படியா சில மீடியாக்களின் மூலம் இந்த செய்தி வெளியானது.

லியோ திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் என்னை அணுகினார். அப்பொழுது லியோ திரைப்படத்தின் கதை குறித்தோ என்னுடைய கதாப்பாத்திரம் குறித்தோ எதுவும் செல்லவில்லை. நடிகர் விஜய் அவர்களின் தங்கையாக நடிக்க இருப்பதாக மட்டும் கூறினார்.

அதே சமயம் லியோ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் அன்பறிவ் மாஸ்டர்ஸிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டேன்” என்று நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் கூறினார்.

Exit mobile version