மாற்றம் முன்னேற்றம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆனாலும் அவருடைய ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுதான் உங்களுடைய மாற்றம் முன்னேற்றம் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் அரசியல்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கூட அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் தான் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி பாமக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வன்னியர் சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு கொடுத்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு முன்பாகவே பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வலைதளப் பக்கத்தில் இடப்பங்கீடு போராட்டம் என்ற ஹாஷ்டேக் வைரல் ஆனது இந்த சமூகத்தை சார்ந்த பலரும் எங்களுக்கு 20% இட ஒதுக்கீடு வேண்டும் இன்று காலை முதலே பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள். அதேநேரம் போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஆங்காங்கே காவல் துறையினர் தங்களை தடுப்பதாக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பெருங்களத்தூர் அருகே வந்த தொடர் வண்டியை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தியது பரப்பரப்பை ஏற்படுத்தியது.அதுவரை போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழக ஊடகங்கள் இந்த ரயில் மறிப்பு சம்பவத்தை வைரலாக செய்தனர்.
பாமக நிறுவனர் இதை அறவழி போராட்டம் என அறிவித்திருந்த நிலையில் இந்த ரயில் மறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில் இது ஒரு சமூகத்தின் உரிமை அதை பெற அவர்கள் எடுத்த இந்த முடிவு ஏற்று கொள்ள தக்கதே என்றும் பாமகவினருக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.