மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்! ஓப்பனாக பதில் சொன்ன அமைச்சர்!

0
117

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு உறுப்பினர் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதுபோன்ற திட்டம் எதுவும் அரசிடமில்லை என்று பதிலளித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்ததாவது,

இந்திய தூதரகங்கள் வழங்கிய தகவலினடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 4,355 பேர் நோய் தோற்றால் பலியாகியிருக்கிறார்கள். இவர்களில் 127 பேரின் உடல்கள் மட்டும் இறுதி சடங்கிற்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் அதிகளவாக சவுதி அரேபியாவில் 1237 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு சிறைகளில் 7,925 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகளவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1663 இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த மர்மம் தொடர்பான கேள்விக்கு அவர் தெரிவித்ததாவது, நேதாஜி தொடர்பாக கோப்புகள், ஆவணங்கள், உள்ளிட்டவற்றை இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெற மத்திய அரசு முயற்சியை முன்னெடுத்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.