Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை! உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அண்டை நாடான ரஷ்யா. ஆனால் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தது. அதே நேரம் அதற்கான முயற்சிகளில் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா திடீரென்று கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று ஐநா சபை வேண்டுகோள் வைத்தது.

அதோடு மேலும் பல உலகத் தலைவர்கள் ரஷ்யாவிற்கு தொடர்ந்து இதே கோரிக்கையை முன்வைத்து வந்தார்கள். ஆனாலும் ரஷ்யா அவர்களுடைய பேச்சை கேட்பதாக இல்லை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவில் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 2 வாரங்களை கடந்து சென்று விட்ட நிலையிலும் போர் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக, இரண்டு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என்று பலர் பலியாகி இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், இதுவரையில் நடைபெற்ற 3 கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.துருக்கி நடைபெற்ற இந்தப் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version