ராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக

0
166

ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை

இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு எந்த ஒரு ராஜ்யசபா தொகுதியும் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் எனவே அக்கட்சிக்கு ராஜ்யசபா தொகுதி ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக தரப்பில் இருந்து கூறப்படுட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத தேமுதிக ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்படுவது அதிகம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.