நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் ரேஷன் அரிசி கிடையாது? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக ரேஷன் வழங்கும் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் உதவி பெறுவதற்கு சில முக்கியமான விதிமுறைகள் உள்ளது. அதாவது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை பெறக் கூடாது.
மேலும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை வாங்குவது தெரிய வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1௦௦ மீட்டர் சதுர அளவில் சொந்த மனை அல்லது வீடு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசியை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் டிராக்டர்கள் வைத்திருப்பவர்கள், ஆயுத உரிமை வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் அரிசியை பெறக் கூடாது.
மேலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் மேலாக இருந்தால் அவர்களுக்கு இலவச ரேஷன் அரிசி கிடையாது. அதுபோன்ற நகரப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு இலவச ரேஷன் அரிசியை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் தான். அதனை அடுத்து நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இலவச ரேஷன் அரிசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வசதி படைத்தார் சிலர் இலவச ரேஷன் அரிசி திட்டத்தில் பயன்பெறுவதால் தகுதியானவர்களுக்கு உதவி கிடைக்காமல் உள்ளது என தகவல் வந்துள்ளது. இதனால் தான் இந்தியாவிலும் சில மாநிலங்களில் இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.