சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் கடல் கொள்ளையர்களை அச்சுறுத்துவதும் என தொடர்கதை உள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் கைது செய்து நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. ஆனால் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், வலைகளை சேதப்படுத்துவதும், படகுகளை பரிந்து செய்வதுமாக உள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர் சங்கம் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மீனவர் விவகாரத்தில் இலங்கை: இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை! பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து விட்டது! என இலங்கை அமைச்சர் சந்திரசேகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சந்திரசேகன் கூறியதாவது “இனி பேச்சு இல்லை! மீனவர்களுக்கு இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை! பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து விட்டது! இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரியுடன் பேச்சு நடந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்டயோ இந்த பேச்சில் இடம்பெறும் மனிதாபமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை நடைபெறாது” என அவ்வாறு அவர் கூறியுள்ளார்.