ரத்தானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

0
114

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்து இருக்கின்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஆரம்பமான நிலையிலேயே எட்டு நாட்கள் மட்டும் நடந்து செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நிறைவடைந்தது கொரோனா தொற்று காரணமாகவும், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையிலும், 25 திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் காரணமாக அந்த கூட்டுதொடர் முடித்து வைக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடர் எப்பொழுதும் நவம்பர் மாதம் கடைசியில் அல்லது டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி கடைசியில் ஆரம்பித்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தோற்றுப் பரவல் டெல்லியிலே இன்னும் குறையாத நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி இருந்து வந்தது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்றன 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி முதல் கொண்டு நாட்டின் பல இடங்களில் 20-வது நாளாக விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் விவசாயிகள் போராட்டம் மற்றும் பரவல் அதோடு பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி இருக்கின்றார்.

எனவே அவருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் மூலமாகவே பதில் கூறியிருக்கின்றார். கொரோனா அச்சுறுத்தல் இருந்து வருவதால் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குளிர் காலம் என்ற காரணத்தால், தொற்று அதிகமாக பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், இப்போது டிசம்பர் மைய பகுதியில் இருந்து வருகின்றோம், தொற்றுக்கான தடுப்பூசி விரைவாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதொடர்பாக, நான் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையிலே தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றேன். அவர்கள் நோய்த்தொற்று தொடர்பாக தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதோடு குளிர்கால அமர்வை தவிர்ப்பதற்கான விருப்பம் தெரிவித்தார்கள். என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்தார் ஜோஷி.

ஜனவரி மாதம் மையப்பகுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.