Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களுக்கு “நோ வொர்க் நோ பேமென்ட்”:! தமிழக அரசு எச்சரிக்கை?

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி,நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர்,வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் எழுதியிருக்கும் அந்த எச்சரிக்கை சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ள வாறு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு “நோ வொர்க் நோட் பே”என்ற அடிப்படையில் சம்பளப் பிடித்தம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Exit mobile version