Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர் தங்கமணி மக்களுக்கு கொடுத்த உறுதிமொழி!

அதிமுகவின் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக சாமானிய மக்கள் ஆளும் கட்சியாக இருக்கும் காரணத்தால், பொதுமக்களும் இளைஞர்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருக்கின்ற ஆலம்பாளையம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதிமுக தலைமையிலான அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிமுக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக சாமானியர் ஆளும் ஆட்சியாக இருக்கும் காரணத்தால், இளைஞர்களும், பொதுமக்களும், இந்த கட்சியில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள் 2021 ஆம் ஆண்டு மறுபடியும் அதிமுக ஆட்சி அமையும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று தெரிவித்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் மே மாதம் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடக்கும் கல்லூரியின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. நாமக்கல்லில் சட்டக்கல்லூரியில் குமாரபாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்பட இருக்கின்றது. அதிமுக தலைமை அறிவித்தால் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக நான் போட்டியிட தயாராக இருக்கின்றேன். ஆனாலும் ஒரு சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். என்னுடைய மகனை இந்த தொகுதியில் நிற்க வைத்துவிட்டு நான் பரமத்தி வேலூரில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.என்னுடைய குடும்பத்தில் இருந்து இனிமேல் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்து இருக்கின்றார்.

எந்நேரத்திலும் என்னை பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். நான் தொண்டர்களின் கட்சியை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றேன் இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காக தான் என்னுடைய மகன் பணியாற்றி வருகிறார். என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version