முதலையின் கால் வறுவலுடன் விற்கப்படும் நூடுல்ஸ்! பரபரப்பாக நடக்கும் விற்பனை எங்கு தெரியுமா!!
தைவான் நாட்டில் ஹோட்டல் ஒன்று முதலையின் கால் வறுவலுடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் நூடுல்ஸ் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வித்தியாசமான உணவுகள் இருக்கத்தான் செய்கின்றது. இந்தியாவில் சிவப்பு எறும்பு சட்னி, சீனாவில் பாம்பு சூப், தேள் லாலிபப், அடைகாக்கப்பட்ட முட்டை, உயிருடன் உள்ள புழு சாக்லேட் என உலகம் முழுவதும் வித்தியாசமான உணவுகள் இருக்கின்றது. அந்த வகையில் தைவான் நாட்டில் முதலை கால் வறுவல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தைவான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இந்த உணவு பறிமாறப்படுவது போல காட்டப்பட்டுள்ளது.
ஒரு கோப்பையில் நிறைய நூடுல்ஸ் இருக்கின்றது. அந்த நூடுல்ஸுடன் சேர்த்து ஒரு முதலையின் கால் வறுவலுடன் சேர்த்து இந்த உணவு அந்த பெண்ணுக்கு பறிமாறப்படுகின்றது.
அந்த பெண்ணும் அந்த உணவை எடுத்து பொறுமையாக ருசித்து சாப்பிடுகிறார். பிறகு இந்த உணவை பற்றி அந்த இளம்பெண் இந்த உணவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதலை கால் வறுவல் நூடுல்ஸ் என்று தமிழில் நாம் பெயர் வைத்தாலும் இந்த உணவை அறிமுகப்படுத்திய தைவான் நாட்டை சேர்ந்த ஹோட்டல் இந்த உணவுக்கு காட்ஜில்லா ராமென் என்று பெயர் வைத்துள்ளது. இந்த காட்ஜில்லா ராமென் உணவின் விலை இந்திய மதிப்பில் 3900 ரூபாய் ஆகும்.