Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

#image_title

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்திஞ்செய் மஹோபாத்ரா தென்மேற்கு பருவ காலத்திற்கான வானிலை கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்த அவர் ஜூன் முதல் செப்டப்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 96% மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீபகற்ப இந்தியா கிழக்கு மத்திய இந்தியாவை ஒட்டி உள்ள பகுதிகள் கிழக்கின் இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் இயல்பான மழை பொழிவு இருக்கும் என தெரிவித்த அவர் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகள் போன்றவற்றில் இயல்பானது முதல் மிதமானது வரையிலான மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்தார்.

பருவமழை காலத்தில் எல் நினோ நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தவர் அதனுடைய தாக்கம் பருவ காலத்தில் இரண்டாவது பிற்பகுதியில் காணப்படலாம் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version