உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா! தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!!

0
197
#image_title

உளவு செயற்கை கோள் ஏவிய வடகொரியா!  தோல்வியில் முடிந்ததாக அறிவிப்பு!

வடகொரியா நாட்டின் முதல் உளவு செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரியா நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி குறிப்பில் உளவு செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் இந்த ராக்கெட் பல பிரச்சனைகளை சந்தித்து நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

வடகொரியா தனது முதல் உளவு செயற்கோளை விண்ணில் செலுத்துவதன் காரணமாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வடகொரியா தனது முதல் உளவு செயற்கோளை ராக்கெட் முலமாக நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை அடுத்து தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டதால் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முன்னதாக வடகொரியா நாட்டில் உளவு செயற்கை கோள்  ஏவப்படுவதை அறிந்து ஜப்பான் அரசு வடகொரியாவின் உளவு சொயற்கை கோள் ஜப்பான் எல்லைக்குள் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.

நீண்ட தூர ஏவுகனை தொழில் நுட்பத்தை வடகொரியா பயன்படுத்துவதற்கு ஐ.நா சபை தடை வதித்திருக்கிறது. ஐ.நா சபையின் அந்த தடையை மீறி நீண்ட தூரஜஏவுகனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடகொரியா உளவு செயற்கை கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது” என்று வெளியிட்டுள்ளது.