Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று கலாட்டா செய்துள்ளனர். உடனே அவ்விடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்கள் இருவரையும் எச்சரித்து ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

அப்பெண்கள் இருவரும் வீட்டிற்கு செல்லாமல் அருகிலுள்ள அண்ணா நகர் காவல் நிலையத்திற்குள் புகுந்து, அந்த தனியார் பாரின் மீது புகாரளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதைப் பற்றி போலீசார் விசாரிக்க முயன்ற போது போதையில் கத்தி, கூச்சலிட்டு, அங்கிருக்கும் பொருட்களை தூக்கி வீசியுள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த பெண்களின் கைபேசியில் உள்ள சூளைமேட்டை சேர்ந்த பெண் ஒருவரின் எண்ணிற்கு அழைத்து, அவர்களை அழைத்து செல்லுமாறு கூறினர். பின்னர் போலீசார்  காலையில் அப்பெண்களை வரவழைத்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்

Exit mobile version