நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த சமயத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் மிக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள் அதோடு தற்சமயம் நோய்த்தொற்று சிறிது சிறிதாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், மெல்ல, மெல்ல தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இருந்தாலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது தமிழகம் முழுவதும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒரு சில மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் சரிவர நடைபெறவில்லை என்று அந்த மாவட்டங்களின் அமைச்சர்களையும், முதலமைச்சர் ஸ்டாலின் கடிந்து கொண்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தடுப்புப் பணி மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டார்கள்.
தற்சமயம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருப்பதால் சென்னையில் இருக்கின்ற 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகளை அதேபோல நியமனம் செய்திருக்கிறது தமிழக அரசு. மற்ற மாவட்டங்களில் பொறுத்தவரையில் நோய் தொற்று தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளே பருவ மழைக்கும் கண்காணிப்பு அதிகாரியாக பணி புரிவார்கள் என்று அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.
முன்னதாக பருவ மழை காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.