இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

0
134
Northeast Monsoon Rain in Tamil Nadu-News4 Tamil Latest Online Tamil News Today

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியுள்ளர்.

சென்னை:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வழி மண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதி வரையிலும் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட் டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 33 மி.மீ. மழையும், புழல் ஏரி அமைந்துள்ள பகுதியில் 28 மி.மீ. மழையும், சோழவரம் பகுதியில் 30 மி.மீட்டரும், பூண்டி ஏரி அமைந்துள்ள பகுதியில் 6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மேலும் சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார். திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி கிடந்தது.

இன்று காலையிலும் தொடர்ந்து மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டது.

இது பற்றி வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.