Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேக்ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் !! பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி !!

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை அவர்களின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும் அதேபோல வீட்டில் இருந்த அவர்களின் உடைமைகளை ரயில் பெட்டிக்கு கொண்டுவரவும் ஒரு புதிய திட்டத்தை வடக்கு ரயில்வே தொடங்கப்பட்டுள்ளது
.

பேக்ஸ் ஆன் வீல்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்கு இந்த சேவையை வடக்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

வடக்கு ரயில்வே தற்பொழுது இந்த சேவையானது புதுடெல்லி ,டெல்லி ஜங்ஷன், டெல்லி கன்டோன்மெண்ட், டெல்லி சராய் ரோகில்லா, ஹஸ்ரத் நிஜாமுதீன், குரு கிராம், காசியாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்றுமதி இறக்குமதி செயல்களுக்கு தனியார் இருபத்தி நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட வடக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், இந்த சேவை குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும், பொருளின்  சுமை ,எண்ணிக்கை மற்றும் அதன் பயணிக்கும் தூரத்தின் அடிப்படை கொண்டே கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது அவர் கூறினார்.

இந்த திட்டமானது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version