Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா. சனிக்கிழமை அன்று தனது செல்ல நாயை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த செல்ல நாயின் படங்களை பகிர்ந்து அந்த நாயின் பெயரை அவுரா என்று தெரிவித்தார். அந்த செல்லப்பிராணி அவரை விவேகத்துடன் வைத்திருப்பதாகவும் கூறினார். தன் செல்லப் பிராணி ஆவலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன..

2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் தனது நடிப்பின் மூலம் உன் அழகின் மூலம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார்.

இதனால் கூகுள் இவருக்கு ” National Crush” என்று பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. National Crush என்று கூகிளில் தேடினாலே இவர் படம் தான் வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் மிகவும் அழகான இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா.

இந்நிலையில் அவர் புதிதாக வளர்க்கும் செல்ல பிராணி ,இந்த கொரோனா காலத்தில் அவுரா தன்னை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாக கூறினார். அந்த போட்டோக்களை வலைதளங்களில் பதிவிட்டு அவர் ” ஹாய் தோழர்களே, இங்கு உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நடுவே எனது மகிழ்ச்சியின் மூட்டையை நான் கண்டேன். இது முழு நேரமும் என்னை விவேகத்துடன் வைத்திருக்கிறது. எனது செல்லப்பிராணியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறி AURA! என பெயரும் சொன்னார்.

நீங்கள் மூன்று வினாடிகளில் ஒருவரை காதலிக்க முடியும் என்று கூறுவார்கள். ஆனால் அவள் என் இதயத்தை 3 மில்லி விநாடிகளில் அன்பினால் கரைத்து விட்டாள். அதை உங்களுக்கு சொல்ல விரும்பினேன்”. என அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

 

Rashmika Mandanna introduced her pet dog, Aura, to the world.

Exit mobile version