Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

#image_title

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுகவினர் செய்த ஊழல், பண மோசடி உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் வெளியிட்டு அமைச்சர்களை பீதியில் வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதேபோல் திமுகவின் நடவடிக்கைகளை நேரடியாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு குறித்து கிண்டல் செய்து பேசி இருக்கிறார்.

கடந்த ஞாயிறு(ஜனவரி 21) அன்று சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்று. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பல கூத்துக்கள் அரங்கேறி இருப்பபதை திமுக தொண்டர்களே ஆவேசப்பட்டு பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டு பந்தல், லட்சக்கணக்கில் வருகை தரும் தொண்டர்கள், அசைவ பிரியாணி என்று விளம்பரம் படுத்திய திமுகவை, அக்கட்சி தொண்டர்களே நோஸ் கட் செய்து இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இது திமுக இளைஞரணி மாநாடு அல்ல கருணாநிதி குடும்ப மாநாடு என்று விமர்சித்து இருக்கிறார். இந்த மாநாட்டில் தொண்டர்களை விட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இவ்வாறு கூறி இருக்கிறார்.

அதுமட்டும் இன்றி குடும்ப ஆட்சியை நடத்தி வரும் திமுகவால் தமிழகம் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. திமுகவின் நிலைப்பாடு இந்து மதத்திற்கு எதிராக உள்ளது.

இவர்கள் நடத்திய மாநாட்டால் எந்த பயனும் இல்லை… உணவு வீணானது தான் மிச்சம்… மாநாட்டு பந்தலில் இருந்த குப்பை கூடைகளில் நீட் விலக்கு அட்டைகளை குவித்தது தான்
மிச்சம்… திமுக நடத்திய மாநாடு நமத்து போன மிச்சர். திமுக என்ற ஊழல் கூட்டத்தின் உண்மை முகம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். இவர்கள் செய்த ஊழல், பண மோசடிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என்று அண்ணாமலை அவர்கள் ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version