போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர்.
மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.இதனால் உக்ரைன் போரில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கும் அவ்வப்போது வன்கொடுமைகளும் நடந்து வருகின்றது என பல குற்றசாட்டும் எழுந்து வருகிறது.இந்நிலையில் பெரியவர்கள் முதல் சிறுமிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர கால நிதி அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே ரஷ்ய படையில் 1.37லட்சம் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிபர் புதின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.இதனால் ரஷ்யர்களின் படை வீரர்களின் எண்ணிக்கை 11.5 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.இதனை தொடர்ந்து அங்குள்ள சில கைதிகளை கூட ராணுவ பணியில் ஒரு பகுதியாக படையில் சேர அவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது என ரஷ்ய உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
இதை பற்றி அமெரிக்க பாதுகாப்பு துரையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிப்பதாவது,உக்ரைனுக்கு எதிரான போரில் வீரர்களை கண்டறிய ரஷியா மிக தீவிரமாக போராடி வருகிறது. ரஷிய அதிபர் புதின் தனது படையில் 1.30 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சமீபத்திய முயற்சியால் அவர் வெற்றி பெறுவார் என அமெரிக்க அரசு கருதவில்லை.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் முன்பே, ரஷிய படை வீரர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை அவர்கள் அடையவில்லை. அப்போதே அவர்களிடம் 1.50 லட்சம் வீரர்கள் பற்றாக்குறையாகதான் இருந்தது. எனவே ஆள்சேர்ப்பு பணியை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இந்த புதிய ஆள்சேர்ப்பில் உள்ளவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்கள் வேலைக்கு தகுதியற்ற மற்றும் சரியான பயிற்சி அளிக்கப்படாதவர்களாகவே வருகின்றனர்.
எனவே இவை எல்லாவற்றிலும் இருந்து எங்களுக்கு தெரிய வருவது என்னவென்றால், கூடுதல் வீரர்களை ஆண்டு இறுதிக்குள் சேர்ப்பது என்ற ரஷியாவின் இலக்கு பூர்த்தியடையாது என கூறியுள்ளார்.விரைவில் அதற்கான தகுதியுடைய ஆட்களை சேர்க்க திட்டமிட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.