Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

#image_title

ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையா? அப்போ இதை பண்ணுங்க.. 100 பவுன் தங்கத்திற்கு அதிபதி ஆகலாம்!

தங்கம் என்றால் யாருக்கு தான் மோகம் இருக்காது. தங்கத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒருவரை எடை போடுகிறது.

அதுமட்டும் இன்றி ஆபரண தங்கத்தின் டிசைன்களுக்கு முன் அதன் விலை ஏற்றம் மக்களுக்கும் பெரிதாக தெரிவதில்லை.

மில்லி கிராம் அளவிற்காவது தங்கத்தை சேர்த்து வைக்க அனைவரும் ஆசைப்பட காரணம்.. அதன் விலை ஏற்றம் தான்.

அவசரத் தேவைக்கு பணம் இல்லை என்றாலும் தங்கம் கைகொடுக்கும் என்பதினால் அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய தங்கத்தை கிலோ கணக்கில் சேர்க்க ஆசைப்படுபவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

தங்கம் குவிய பின்பற்ற வேண்டியவை…

1)தங்கத்தை எந்த நாட்களில் வேண்டுமாலும் வாங்கலாம். ஆனால் வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் வாங்கினால் மீண்டும் மீண்டும் தங்கம் வாங்கும் சூழல் ஏற்படும்.

2)அதேபோல் தங்கம் வாங்க உகந்த நேரம் இருக்கிறது. குளிகை, சுக்ர ஓரை, குரு ஓரையில் வாங்கினால் தங்கம் அதிகளவில் சேரும்.

3)சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி, பௌர்ணமி ஆகிய திதிகளில் தங்கம் வாங்குவது இன்னும் சிறப்பு.

4)பூசம், அஸ்வினி, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, ரேவதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்களில் நகை வாங்குவது நல்லது.

Exit mobile version