Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!

முதலில் மக்களிடையே பிரபலமாவது மிகவும் கடினம் அப்படி மக்களிடையே பிரபலமாக வேண்டுமென்றால் பிரபலமான நபரின் வாரிசாகவோ அல்லது பிரபலமான குடும்பத்தின் நபராகவோ இருக்க வேண்டும்.

அப்படி பெரிய அளவில் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் முதலில் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர்கள் தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்.

திரைத்துறையில் மெல்ல, மெல்ல வளர்ந்து முதலில் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தான்.

அவர் திரைத்துறையில் இருந்த காலகட்டத்திலேயே அரசியலுக்கு வர பிள்ளையார் சொல்லி போட்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது அவர் நடித்த பல திரைப்படங்களை உற்று நோக்கினால் அதற்கான சுவடு தென்படும்.

திரை துறையில் தனிப்பெரும் நட்சத்திரமாக வலம் வந்த எம்ஜிஆர் பிற்காலத்தில் அறிஞர் அண்ணாதுரை ஆல் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார் பின்னர் அவருடைய மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குளறுபடியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் என்று ஒரு தனி கட்சியை தொடங்கி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கினார்.

அவருடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஜெயலலிதா பின்னர் அவருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்து பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா பல இன்னல்களை சந்தித்து அதன் பிறகு அதிமுகவை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முழுக்க முழுக்க ராணுவ காட்டுப்பாட்டுடன் அந்த கட்சியை வழிநடத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால் முதன் முதலில் திரைத்துறையில் மாபெரும் சக்தியாக விளங்கிய இருவர் அப்படியே அரசியலுக்குள் கால் பதித்து ஆட்சியைப் பிடித்து சாற்றையாறு குறைய 10 வருட காலம் தமிழகத்தின் முகமாக விளங்கியது எம்ஜிஆர் அவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.

இந்த நிலையில் சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளையை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

இதனை தொடர்ந்து உரையாற்றிய அவர் சினிமா துறையில் தற்போது அரசியல் கலந்து வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித் தலைவியும் ஏழைகளுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். திரையுலகிற்க்கும், அதிமுகவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சியின் இருபெரும் தலைவர்களுமே திரைத் துறையில் இருந்து வந்தவர்கள். அது எந்த கட்சிக்குமே கிடைக்காது. எங்களுடைய இயக்கத்தை தோற்றுவித்தவர்களே இந்த கலை துறையை சார்ந்தவர்கள் தான் புரட்சித்தலைவர் காலம் முதல் திரையுலகத்திற்கு பல்வேறு நன்மைகளை அதிமுக செய்திருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் இருபெரும் தலைவர்களுமே திரைத்துறையில் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்கைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் நுழைவது எவ்வளவு கடினமோ அதே போல தான் அரசியலில் வடிவதும் கடினம் திரைத்துறையில் இயக்குனர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுவார்கள்.

ஆனால் அரசியலில் அப்படி இல்லை. ஒவ்வொரு படியாக ஏறிதான் இந்த நிலைக்கு வர முடியும். அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது. அது எனக்கு கிடைத்திருக்கிறது. அரசியலில் ஜெயிப்பது கடினம் அரசியல் முட்கள் நிறைந்த பாதை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version