12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு! 

0
241
#image_title

12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு! 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்த ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் 12 மணி நேர வேலை சட்டம் குறித்த கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்த தான் முழுமையாக படிக்கவில்லை என பதிலளித்து சென்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். வரக்கூடிய தேர்தலுக்கான கட்சி நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தை முடித்து வெளியே வந்த ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை குறித்த சட்டம் இயற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அது குறித்து தான் முழுமையாக படிக்கவில்லை என்றும் அது குறித்து கருத்து கூற இயலாது என்றும் பதிலளித்ததுடன் சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு தான் ஒன்றும் சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்றும் முழுமையாக தெரிந்த பின்னே கருத்து கூற முடியும் என பேசி சென்றார்.