Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. முழு விவரம் அறிய 2 ஸ்டெப் இதை மட்டும் செய்யுங்கள்!!

not-getting-rs-1000-per-month-just-do-this-2-step-to-know-full-details

not-getting-rs-1000-per-month-just-do-this-2-step-to-know-full-details

திமுக ஆட்சிக்கு வந்து பல நலத்திட்டங்களை புதியதாக கொண்டுவந்ததோடு, பழைய திட்டங்களையும் மாற்றியமைத்தது. அந்தவகையில் புதியதாக மகளிருக்கு ரேஷன் அட்டை மூலம் கலைஞர் உரிமைத்தொகையையும் வழங்கி வருகின்றனர். மேற்கொண்டு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாணவிகளின் கல்லூரி மேற்படிப்பை தொடர்வதற்காக மாதந்தோறும் ரூ 1000 வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கலைஞர் உரிமைத்தொகை வாங்க சில கட்டமைப்பு வரைமுறைகளை வகுத்தது.

அதன் படி அதிகளவு சொத்து கொண்டவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள் என யாருக்கும் இது கிடைக்காது என தெரிவித்தனர். இருப்பினும் தகுதி இருந்தவர்கள் பல பேருக்கு உரிமைத் தொகையானது கிடைக்கவில்லை. இவ்வாறு தொடர் புகார் வந்ததையடுத்து அரசானது மேல் முறையீட்டு மூலம் மீண்டும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்தது.

இதன் மூலம் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் உரிமைத்தொகை வழங்க ஏற்ப்பாடு செய்தனர். அச்சமயத்தில் தான் பெண்கள் மறுவாழ்வு மையத்திலிருப்பவர்களுக்கும், மாநகராட்சி சுகாதாரத்தில் வேலை செய்யும் மனைவிகளுக்கும்  இந்த திட்டம் செல்லுபடியாகும் என கூறினர். தற்பொழுது சட்டமன்ற தேர்தல் ஓராண்டில் வர உள்ள நிலையில் வருடந்தோரும் புதியதாக ரேஷன் அட்டை வாங்கும் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்க வழி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் யாரெல்லாம் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்பதை அறிய அதிகாரபூர்வ இணையத்தை https://kmut.tn.gov.in/login.html வெளியிட்டுள்ளனர். மக்கள் தங்களின் செல்போன் அல்லது லேப்டாப் மூலம் அந்த இணையத்திற்கு சென்று தங்களது ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை கொடுத்து சரிபார்த்துக் கொள்ளலாம். தற்பொழுது வரை கிட்டத்தட்ட  2 லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்த நிலையில் அவர்களெல்லாம் நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version