ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!

0
130

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது.

சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து வருவதால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது.

இந்த போர் காரணமாக, ரஷ்யாவின் மீது அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யாவுடன் எந்த நாடும் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

ஆனால் ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்காவும், மற்ற மேலை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து இந்தியாவிற்கு வந்தது தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காகத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சிறந்த நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு காலத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டபோது அந்த சமயத்தில் இந்தியாவிற்கு துணையாக நின்ற ஒரே நாடு ரஷ்யா தான் என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

இந்த சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் தெரிவித்த பதில் வருமாறு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவையை கருத்தில் கொண்டு எங்களுடைய அணுகுமுறை அமைகின்றது.

பல்வேறு பிராந்தியங்களின் நாடுகளும் கூட இதே கண்ணோட்டத்தில் கொள்கை முடிவு எடுப்பதை சமீபத்தில் நீங்கள் பார்த்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே இது இந்தியா மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை கிடையாது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தியா வாங்குவதை விட அதிகம் என்று தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகம் வைத்துக்கொள்வதற்கு இதைவிட ஒரு மிக சிறந்த உதாரணமிருக்கிறது.

அதாவது இந்தியாவிற்கு ஏதாவது பிரச்சனை என்று ஏற்பட்டால் உடனடியாக நமக்கு உதவிக்கரம் நீட்டுவது ரஷ்யா தான்.

ஒரு காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்து நம்முடைய நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முற்பட்ட போது அதனை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்தது ரஷ்யா தான் என்பது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.

அதேபோல பாதுகாப்பு ரீதியாகவும் பலமுறை மேலைநாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து நம்மை ரஷ்யா காப்பாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.