Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. திண்டுக்கல் பாடநூல் கிடங்கில் இருந்து பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ. லியோனி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர். பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப் படும் என்றும் பாடப்புத்தகங்களில் தட்டுப்பாடு எதுவும் இல்லை. அனைத்து மாணவர்களுக்கும் அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகங்கள் கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பாடப்புத்தகங்கள் தவிர 11 கல்வி உபகரணங்களையும் அரசு இலவசமாக மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version