Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோட் பண்ணிக்கோங்க.. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இந்த விஷயங்களை தப்பி தவறியும் பேசிடாதீங்க!!

Note.. Do not avoid talking about these things at your work place!!

Note.. Do not avoid talking about these things at your work place!!

நீங்கள் பணி செய்யும் இடத்தில் சில விஷயங்கள் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அது தங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும் செயலாக மாறிவிடும்.இன்று ஆண்,பெண் அனைவரும் காலில் சக்கரம் கட்டியது போன்று வேலை,பணம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டுப்பணிகளை முடித்துவிட்டு அலுவலக பணிகளை செய்பவர்கள் அதிகம்.இதனால் டென்ஷன்,வேலைப்பளுவால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை பணியாளர்கள் எதிர் கொள்கின்றனர்.

அப்படி இருக்கையில் அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை பணியாளர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.வீட்டில் இருப்பதை விட அலுவலகத்திலேயே அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.இதனால் அலுவலகத்தில் பணி புரியும் சக பாணியாளர்களிடம் நட்பு உருவாகிறது.

இதனால் சிலர் தங்களது சொந்த வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அலுவலக நண்பர்களிடம் பகிர்வார்கள்.அதேபோல் சிலர் மதம்,அரசியல் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசுவார்கள்.இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயங்களாகும்.அலுவலகத்தில் மட்டுமின்றி,பள்ளி மற்றும் பிற இடங்களிலும் இதுபோன்ற சர்ச்சையான விஷயங்களை பேசக் கூடாது.இதனால் தங்களுக்கு பெரிய பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது.

மதம்

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மதம் மற்றும் சமூகம் பற்றி பேசவே கூடாது.இது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.அது மட்டுமின்றி உங்கள் மீதான நம்பிக்கையை இது குறைத்துவிடும்.

அரசியல்

அலுவலங்களில் அரசியல் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.இது உங்கள் வேலைக்கே வேட்டு வைத்துவிடும்.அது உங்களுக்கு ஆபத்தாகவும் மாறலாம்.

குடும்ப விஷயங்கள்

பணி புரியும் இடத்தில் உங்கள் குடும்ப விஷயங்கள்,கடன் பிரச்சனைகள்,தங்கள் சொந்த விஷயங்களை பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இது உங்களுக்கே ஆபத்தாக மாறக்கூடும்.

உடல் ஆரோக்கியம்

அலுவலகத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.மருத்துவ பரிசோதனை போன்ற விஷயங்களை பகிர்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் உயர் அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுவிடும்.உங்களுக்கு நோய் பாதிப்பு இருப்பதை பகிர்ந்தால் அது உங்கள் வேலையை பாதித்துவிடும்.

அந்தரங்க விஷயம்

பணி செய்யும் இடத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசினால் அது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும்.இதனால் சக பணியாளருடன் மோதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சர்ச்சை விசயங்கள்,கிண்டலடிக்கும் விஷயங்கள்,ஆதாரமற்ற விஷயங்களை பேசுவதால் உங்கள் மீதான நம்பிக்கை மற்றவர்களுக்கு குறைந்துவிடும்.உங்களின் தரம் தாழ்ந்துவிடும்.எனவே இதுபோன்ற விஷயங்களை அலுவலகங்கள்,கல்வி நிலையங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version