Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் வரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் மற்றுமொரு பேராபத்து! மத்திய அரசு எச்சரிக்கை.

Another disaster from the invading Locusts! Central Govt warning.

Another disaster from the invading Locusts! Central Govt warning.

ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலியாவின் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் வெட்டுக்கிளிகளால் மற்றும் ஒரு பேராபத்து காத்திருக்கிறது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் புதியதாக கிழக்கு நோக்கி இந்த மாத இறுதிக்குள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளுக்குள் வெட்டுக்கிளிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், நகோர், ஜூன் ஜூனு, ஹனுமான் கர், ஸ்ரீ கங்காநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள 32 இடங்களிலும், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் சில இடங்களிலும் உள்ள வெட்டுகிளியும் வட்ட அலுவலகங்களான எல்சிஓ மூலமாக வெட்டுக்கிளிகள் கூட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்டன.
மேலும் முழுமையாக வளர்ச்சி பெறாத இளஞ்சிவப்பு வெட்டுக்கிளிகளும், முதுமையாக வளர்ச்சி பெற்ற மஞ்சள் நிற வெட்டுக்கிளிகளும் மேற்கூறிய மாவட்டங்களில் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் 11ஆம் நாள் முதல் ஜூலை 26 வரை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா,  உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 2, 14, 642 ஹெக்டேர் நிலப்பரப்பில் எல்சிஓக்கள் மூலமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெரும் பயிர் சேதங்கள் ஏற்பட்டன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாவட்டங்களில் கணிசமான அளவு பயிர் சேதங்கள் ஏற்பட்டு இருந்தன.
ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா என்னும் இடத்திலிருந்து கூட்டம் கூட்டமாக புறப்படும் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அடுத்து வரும் வாரங்களில் மிக மோசமாக இருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெட்டுக்கிளிகளின் நிலவர அறிக்கைகளை 21.7.2020 அன்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சோமாலியாவின் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகளானது, இந்தியப் பெருங்கடல் வழியாக பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ இருப்பதாக அபாய எச்சரிக்கையை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Exit mobile version