Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு! 

டி என் பி எஸ் சி வெளியிட்ட அறிவிப்பு! இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழக தலைமை செயலகத்தில் குரூப் 5 நிலை பணியிடங்களை நிரப்பப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி தலைமைச் செயலக பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் பணி மாறுதல் முறையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள் மற்றும் விருப்பம் உடையவர்கள் 21.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version