Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு!! அரசின் சூப்பர் அறிவிப்பு!!

#image_title

புதுச்சேரியில் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு அறிவிப்பு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக கூறுவது பெண்களுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சாமிநாதன், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நூறாவது நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் 200 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், சுமார் 30,000 நிர்வாகிகள் பார்க்கக் கூடிய வகையில் இதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இரண்டு மணி நேர வேலை குறைத்ததை ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என திமுக விமர்ச்சித்துள்ளது. இது ஏற்புடையதல்ல, புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவாவின் இந்த கருத்து பெண்களுக்கு எதிரான கருத்து இதனை பாஜக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version