tamil nadu government ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு.
தமிழக அரசு சார்பில் மாணவர்கள் உயர்கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறை பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அரசு கல்லூரிகளில் உதவித் தொகை வழங்குவது மட்டுமல்லாமல் தனியார் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லுரி மருத்துவக் கல்லூரி, மருத்துவ துறை சார்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
உதவித்தொகை பெற விண்ணப்பங்களை புதுப்பித்தல், அதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் உதவித் தொகை பெறும் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் UMIS (https://umis.tn.gov.in/ ) என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறாலாம்.
இது மட்டுமல்லாமல், தமிழ் வழியில் மேல்நிலைப்பள்ளி வரை பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முன் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.