இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!
இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது.
இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர்தான் இந்நிலைக்கு காரணம் எனக்கூறி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அன்னிய நாட்டு செலவாணி இல்லாமல் பெருமளவு தவித்து வருகிறது.
இவ்வாறு பல நெருக்கடிகளை இலங்கை சந்தித்து வருவதால் இதர நாடுகளிடம் இருந்து வாங்கிய கடனை இந்த சூழலில் கட்ட இயலாது எனவும் கூறியுள்ளது. வாங்கிய கடனின் வட்டியை கூட கட்ட முடியவில்லை என்றால் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் தினந்தோறும் தொடர் போராட்டங்களாகவே இலங்கையில் காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இருக்கையில் ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338 வரை விற்பனை ஆகி வருகிறது.அதே டீசல் விலை ரூ.289 க்கு விற்பனை ஆகி வருகிறது.இந்த விலையானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.மக்கள் தெய்வதரியாது தவித்து வருகின்றனர்.அன்றாட தேவைகளுக்கு மக்கள் கஷ்டப்படும் வேளையில்,இதனின் விளையும் உயர்ந்துள்ளது.மக்கள் போராட்டம் தீவிரமடையும் என கூறுகின்றனர்.