Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

#image_title

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

ஆன்லைன் வழியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் பெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் ஜாதி சான்றிதழ் நிராகரிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், தான் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தனது கணவரும் இதே சமூகத்தை சேர்ந்தவர் என்றும் சமூக சாதிச் சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். அதில் 11ம் வகுப்பு படிக்கும் தனது மகள் துர்காதேவிக்கு கல்வி மற்றும் அரசு சலுகைகள் பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்ததாகவும், முறையான ஆவணங்கள் இல்லை என கூறி ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் முடிந்த 2022 செப்டம்பரில் சாதிச் சான்றிதழ் கோரி மீண்டும் ஆன்லைன் மூலமாக அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். அதன்பின்பும் அக்டோபர் 7ம் தேதி அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதி சான்றிதழ் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, ஆன்லைன் வழியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் பெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

1994ல் எஸ்டி பிரிவினரில் சாதிச் சான்றிதழ் தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் மேலும் 2022ல் உயர்நீதிமன்றமும் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்கள். தமிழ்நாட்டில் எஸ்டி பிரிவு சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்து சட்டம் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ஜூலை மாத இறுதிக்குள் எஸ்டி பிரிவு சாதிச் சான்றிதழ் குறித்து வரையறைகள் செய்யப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவியின் சாதிச் சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version