இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!!
சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியில் பதவி மாற்றம் உண்டாகலாம் என பல கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கூறி வருகின்றனர். அந்த வகையில் உறுப்பினராக கட்சிக்குள் நுழைந்து தற்பொழுது அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் உதயநிதிக்கு கட்டாயம் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வராக பதவி வகித்த போதிலும் இவருக்கு தொழில் துறை ஒதுக்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
அதானிக் குழுமத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கும் திமுக, தற்பொழுது அந்நிறுவனம் மின் உற்பத்தி செய்வதற்கான சுற்றுச் சூழல் அனுமதி கோரியுள்ளது. இந்த அனுமதி எல்லாம் வெறும் கண் துடைப்புக்காக தான் என்றும் அனைத்து ஒப்புதல்களும் முன்னதாகவே வரையறுக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இந்த அதானி மூலம் திமுக பல கோடி கணக்கில் லாபம் சம்பாதிக்க இருக்கிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் தொழில்துறை ஆனது உதயநிதி கையில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவில் ஸ்டாலின் உள்ளதாக கூறுகின்றனர்.
அதேபோல அதிருப்தி உள்ள மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்றும் மேற்கொண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ளதால் தற்போதையிலிருந்து ஒரு சில மாவட்டங்களில் இரண்டு பொறுப்பாளர்கள் அமர்த்தக்கூட நேரிடும் என்றும் கூறுகின்றனர். அறநிலை துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவிற்கு அதிகளவு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதனை மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர். சமீப காலமாக சிறுபான்மை துறைக்கு முக்கியத்துவம் காட்டாததால் இம்முறை அதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.