இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பல சாதனைகளை செய்துள்ளார். அதில் குறிப்பாக இந்த ஆண்டு அதிக விக்கெட் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியானது நேற்று காலை தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது முதல் நாள் ஆட்ட முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதில் கேப்டன் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பல சாதனைகளை செய்துள்ளார். இந்த விக்கெட் மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக முறை விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த பவுலர் என்ற சாதனையை படைத்தார். 2023-2025 ஆண்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 2024 ஆம் ஆண்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்தார்.பும்ரா இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் 18 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.