இனி புதிய மதுரை ஆதினம் இவர் தான்! எளிமையாக முடிந்த பதவியேற்பு விழா!
சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனம் ஆனது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது.மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும்.
திருஞானசம்பந்தரை அடுத்து இன்றுவரை பீடாதிபதியாக 292 பேர் இருந்து வந்துள்ளனர் 292இரண்டாவதாக அருணகிரி இருந்தார் அவருக்கு அடுத்து 293வது ஆக நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் அருணகிரி 5 கோடி நித்யானந்தாவிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு இப்பதவியை தந்ததாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.அதே வேளையில் காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடத்தை சேர்ந்தவர்கள் நித்யானந்தா நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பல்வேறு போராட்டங்களும் நடந்தது.அதனையடுத்து இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்த போவதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த தகவல்கள் வெளிவந்த நிலையில் நித்தியானந்தாவை பொறுப்பில் இருந்து நீக்கினார்.மீண்டும் மதுரை ஆதினம் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளே மதுரை திருமடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.தற்பொழுது இவருக்கு 77 வயதாகி உள்ளது.முதலில் இவருக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.பிறகு இவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவர் பிழைக்க வேண்டுமென்று இவரது பக்தர்கள் தொடர்ந்து பிராத்தனை செய்து வந்தனர்.ஆனால்இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார்.இவரை அடுத்து மதுரை ஆதீனம் பொறுப்புகள் அனைத்தும் இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்க உள்ளார் என கூறினர்.அருணகிரிநாதர் இருந்து பத்து நாட்களுக்கு பிறகு புதிய ஆதினமாக இவர் தற்போது பொறுப்பேற்கிறார்.இந்த அருணகிரி நாதருக்கு குரு பூஜை நடைபெற்றது பிறகு, இவரது பொறுப்பேற்பு பணி மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.இந்த விழாவில் தருமபுர ஆதீனம் ,திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை ஆதினம் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மக்கள் பலர் புதிய ஆதீனத்தை கண்டு ஆசி பெற்று சென்றனர்.