இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு தமிழகத்தையே சிறிது மாதம் எட்டிப் பார்க்காமல் கர்நாடகாவில் இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து சசிகலா சிறையில் இருக்கும் பொழுது டிடிவி தினகரன் டெல்லியில் அமமுக இன்று தனிக்கட்சி தொடங்கி அதில் தலைவர் பதவி வி கே சசிகலாவிற்கு விட்டு வைத்து துணைத்தலைவர் பதவி பொதுசெயலாளர் என அனைத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து வந்தார்.
பின்பு சிறையை விட்டு வந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போதில் வி கே சசிகலா எந்த கட்சியிலும் இல்லை என்று கூறி பேட்டி அளித்ததோடு தொண்டர்களோடு சேர்ந்து அதிமுக வெற்றி பெற பாடுபடுவேன் என கூறினார்.
இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது சசிகலா எதற்கும் ஒத்து வராததால், அடுத்த ஆண்டு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்ற ஆலோசனை செய்த நிலையில் தற்பொழுது அது உறுதியாகி உள்ளது.
இது குறித்து தினகரன் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டதோடு, அங்கிருந்த செய்தியாளர்கள் ஜி 20 மாநாட்டிற்கு பங்கேற்க எடப்பாடி அழைத்திருந்த கடிதத்தில் இடைக்கால பொது செயலாளர் என்று குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு அவர், இடைக்கால பொதுச் செயலாளர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை மத்திய அரசு மற்றும் ஓபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும். நான் வேறு கட்சியின் பொதுச் செயலாளர் மற்றொரு கட்சியின் பிரச்சனையில் தலையிட விருப்பமில்லை என்று கூறி நாசுக்காக அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டார்.
அத்தோடு ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு வேறு கட்சிகளாக பிரிந்து தற்பொழுது அதிமுக நிலையேற்ற தன்மையாக இருக்கும் பட்சத்தில் திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில் பிற்காலத்தில் கட்சியின் நிலைமையை வைத்து தான் அமமுக கூட்டணி வைப்பது குறித்து பேசப்படும். கட்டாயம் இபிஎஸ் தலைமையில் கூட்டணி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனையடுத்து சசிகலாவிற்கும் டிடிவி தினகரன் சிறிதளவு விரிசல் உள்ளது என்பதை கடந்த ஐந்தாம் தேதி அன்று வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. மறைந்த அம்மா முன்னால் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இருவரும் தனித்தனியாக அஞ்சலி செலுத்த வந்த நிலையில் சசிகலாவிற்கு பெருமளவில் ஆதரவாளர்கள் காணப்படவில்லை. இதற்கு காரணம் தினகரன் தான் என்று கூறுகின்றனர்.
தனக்கு முன்பாகவே எனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தும் படி தினகரன் சசிகலாவிடம் கூறியும் அவர் இறுதியாக தான் செல்வேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இறுதியாக சென்றாலும் தினகரன் ஆதரவாளர்கள் தன்னுடன் வருவார் என்று கனவுக்கோட்டை கட்டி விட்டார். இது அனைத்தும் சுக்குநூறாக உடைந்து போனது. டிடிவி தினகரன் அவரது ஆதரவாளர்களை சசிகலாவுடன் செல்லக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில் சசிகலாவிற்கு குறைந்தபட்ச ஆதரவாளர்களே காணப்பட்டனர்.
டிடிவி தினகரனின் இந்த செயலால் சசிகலா மிகவும் அதிர்த்தி அடைந்த காணப்பட்டார். இந்த மோதல் தான் இவர்களுக்கு உள்ள விரிசலை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது. அதனால் தான் டிடிவி தினகரன் அடுத்த ஆண்டு கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளதாக பேசி வருகின்றனர்.