இனி தஞ்சாவூரிலும் லூலு!! விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!

0
229
#image_title

இனி தஞ்சாவூரிலும் லூலு!! விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!

 

லூலு ஹைப்பர் மார்க்கெட் கொண்டு வருவதற்கான பணிகள் சென்ற ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கேரளா, பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே உள்ளது.

மேலும் இந்த நிறுவனம் ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மால் அமைக்கும் பணிகளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளது. ரூ.1.20 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமான ஹைப்பர் மார்க்கெட் கோவையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில் கட்டப்பட்டது.

கோவை மாநகரில் கட்டப்பட்ட லூலு ஹைப்பர் மார்க்கெட்–ஐ தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நிர்வாக இயக்குனர் யூசுப் அலி மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். தற்போது தஞ்சாவூரிலும் இந்த லூலு நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக நிர்வாக இயக்குனர் யூசுப் அலி கூறி உள்ளார்.

நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மாடர்ன் ரைஸ்மில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த லூலு நிறுவனத்தின் மாடர்ன் ரைஸ்மில் விவசாயிகளுக்கு பெரும் அளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது.

இதே போன்று சென்னையிலும் மால் அமைக்கப்பட உள்ளது. மேலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் உணவுப் பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.