இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் குறைந்த விலைக்கு கிடைக்கும்! மக்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு என்று ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்ததாக குறைந்த விலையில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் தற்பொழுது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் உணவுக்கு தேவையான பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இந்த பொருட்கள் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 5 கிலோ உணவு தானியங்கள் வழக்கமாக வழங்கப்படும் பிடிஎஸ் திட்டத்தின் கீழான ரேஷன் பொருட்களுடன் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டத்துடன் சேர்த்து அயோடின் கலந்த ஒரு கிலோ உப்பு 8 ரூபாய்க்கு வழங்க உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மக்களின் அயோடின் குறைபாட்டை குறைக்கும் வகையில் அயோடின் கலந்த உப்பை வழங்குவதற்கு உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அயோடின் கலந்த உப்பு வழங்கும் திட்டத்தை உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவர்கள் நிம்புவாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரேஷன் கடைகளில் உப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிய வைத்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்பொழுது 14 லட்சம் மக்கள் ரேஷன் கார்டு திட்டம் மூலமாக பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அயோடின் கலந்த ஒரு கிலோ உப்பு 8 ரூபாய்க்கு மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது.
வெளி சந்தையில் அயோடின் கலந்த ஒரு கிலோ உப்பு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அயோடின் கலந்துள்ள ஒரு கிலோ உப்பு 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.